சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
8 Oct 2022 4:44 AM IST

'ஃபர்ஹானா' திரைப்படத்தில் இருந்து 'ஓர் காதல் கனா' என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார்.

சென்னை,

தமிழில் தற்போதைய முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகப் போகும் 'ஃபர்ஹானா' திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

இந்த திரைப்படத்திற்கு கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். இது தவிர செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'ஃபர்ஹானா' திரைப்படத்தில் இருந்து 'ஓர் காதல் கனா' என்ற முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை வெளியிட்டார்.



மேலும் செய்திகள்